எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகிய இராணுவ அதிகாரி
Prathees
2 years ago

எம்பிலிபிட்டிய 100 தபால் நிலைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் வெட்டுக் காயங்களுடன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரியின் கையை நபர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



