தனிநபரையோ அல்லது குடும்பத்தையோ பாதுகாப்பதற்காக 22 கொண்டுவரப்படவில்லை: விஜயதாச
Prathees
2 years ago

உத்தேச 22வது அரசியலமைப்பு திருத்தம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குடும்பத்தையோ பாதுகாப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நாட்டை பாதுகாப்பதே தமது ஒரே நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனது மனசாட்சிக்கு ஏற்ப எதிர்க்க முடியாது என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உத்தேச 22வது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்..



