சர்ச்சையை கிளப்பிய நாமல் வெளியான தெளிவுபடுத்தல் கடிதம்

Nila
2 years ago
சர்ச்சையை கிளப்பிய நாமல் வெளியான தெளிவுபடுத்தல் கடிதம்

இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டாரின் டோஹாவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்துக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஏ.எல்.பி.ஜி என்ற குறித்த வர்த்தக நிறுவனம், அதன் மனித வளப் பணிப்பாளர் காயத்ரி ரங்கநாதன் ஊடாக தெளிவுபடுத்தல் கடிதமொன்றை வழங்கியுள்ளது.

இலங்கையை பாரதூரமான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கி, நாமல் ராஜபக்ச நிதிப்பணிப்பாளராக பதவி வகிக்கும் ALBGஎன்ற நிறுவனத்தினூடாக இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒப்பந்தத்தை வழங்கும் மோசடியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

கட்டார் நாட்டின் வர்த்தகர்கள், மற்றும் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துரையாடும் புகைப்படங்கள் குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்த போதிலும் பின்னர் அவை நீக்கப்பட்டிருந்தன.

எனினும் கட்டார் நிறுவனத்தில் நிதிப்பணிப்பாளராக இருக்கும் நாமல் ராஜபக்ச என்ற நபர், தாம் இல்லை எனவும் அதனை முற்றாக மறுப்பதாகவும் அவர் ஒரே பெயரை கொண்ட வேறு நபர் எனவும் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து பதில் அளித்துள்ள ஏ.எல்.பி.ஜி வர்த்தக நிறுவனம், நாமல் ராஜபக்ச என்ற குறித்த நபர், 1961 ஆம் ஆண்டு முதல் நிதிப் பணிப்பாளராக தமது நிறுவனத்தில் பணியாற்றியதாக கூறியுள்ளது.

எனினும் பி.டபிள்யூ.எம். நாமல் ராஜபக்ச என்ற கண்டி, கம்பொலவை சேர்ந்த குறித்த நபர் தற்போது தமது நிறுவனத்தில் பணியாற்றவில்லை எனவும் ஏ.எல்.பி.ஜி என்ற நிறுவனம் தனது விளக்க கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

தமது நிறுவனத்தில் நாமல் ராஜபக்ச என்ற பெயரில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!