பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் மரணம்

#Pakistan #Accident #Death
Prasu
2 years ago
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் மரணம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைபாதையில் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து காவல் உதவி ஆணையர் சையத் மெஹ்தாப் ஷா கூறுகையில், " இஸ்லாமாபாத்தில் இருந்து குவெட்டாவுக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, மலையின் கூர்மையான வளைவில் நெருங்கியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. 

இதில், இதுவரை 19 பேரில் உடல்களை மீட்டுள்ளோம். காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் " என்றார். 

மேலும், பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் மற்றும் பலுசிஸ்தான் முதல்வர் ஆகியோர் இந்த துயரமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!