விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை பிரித்தானிய அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது

Kanimoli
2 years ago
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை பிரித்தானிய அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது

விமான நிலையங்களில் தேசிய பாதுகாப்பு சோதனைகளை பிரித்தானிய அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

தொற்றுநோய்க்கு பின்னர் விமானநிலையத்தில் ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, தேசிய பாதுகாப்பு சோதனைகளை பிரித்தானிய அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

சராசரியாக ஐந்து நாட்களில் அங்கீகாரச் சோதனைகள் நிறைவடையும் எனவும் பயங்கரவாத எதிர்ப்பு சோதனைகள் 10 நாட்களுக்கு குறைவாக எடுக்கும் என்று போக்குவரத்து துறையின் மின்னஞ்சல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், எக்ஸ்ரே ஸ்கிரீனர்கள் போன்ற புதிய ஊழியர்களை கூடிய விரைவில் தொழில்துறைக்கு உள்ளீர்ப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவே இது விமானங்களுக்கான தேவையின் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோடையில் பிரித்தானியாவிற்கு விடுமுறைக்கு வருபவர்கள் விமான நிலையங்களில் பாதுகாப்புக்காக நீண்ட வரிசையில் நிற்பது, சில சந்தர்ப்பங்களில் விமானங்களை தவறவிடல், மற்றும் பயணபொதிகளின் குவியல்கள் பற்றிய புகார்கள் என சமூக ஊடகங்களில் மக்களின் புகார்கள் பதிவு செய்யப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் விமான நிலையங்களில் மக்கள் குழப்பமான சூழ்நிலைகளை சந்தித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பணியாளர் பற்றாக்குறையே இடையூறுக்கான முக்கிய தூண்டுதலாக உள்ளது.

தொற்றுநோய்களின் போது விமானங்கள் தரையிறக்கப்பட்டபோது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த அல்லது பிற துறைகளுக்கு அவர்களை மாற்றிய நிறுவனங்கள் தற்போது அதன் இடைவெளியை ஈடுசெய்ய போராடுகின்றன.

இது பிரித்தானிய விமானத் துறையின் புதிய மீட்சியை பாதிப்பதாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!