ரஷ்ய ராணுவ தளம் மீது 30 முறை தாக்குதல் நடத்திய உக்ரைன்
#Russia
#Ukraine
#Missile
#Attack
Prasu
2 years ago
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் ஐந்தாவது மாதமாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றிய நிலையில், தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
அதேசமயம், தற்காப்பு மற்றும் பதிலடி தாக்குதல்களை உக்ரைன் படைகள் மேற்கொண்டுள்ளன. ரஷியாவிடம் இருந்து ஒரு சில பகுதிகளை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெலிடோபோல் நகரில் உக்ரைன் படைகள் இன்று உக்கிரமான தாக்குதலை நடத்தி உள்ளன.
ரஷிய ராணுவ தளத்தை குறிவைத்து 30 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக நகர மேயர் இவான் பெடோரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தாக்குதலால் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ரஷிய ரெயில் நேற்று மெலிடோபோல் அருகே தடம் புரண்டதாகவும் பெடோரோவ் கூறினார்.




