வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அரசு தீர்மானம்

#Tourist
Prasu
2 years ago
வெனிஸ் நகரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அரசு தீர்மானம்

வெனிஸ் நகரத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அந்நகர அரசு தீர்மானித்திருக்கிறது.

இத்தாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் வெனிஸ் நகரில் நூற்றுக்கும் அதிகமான தீவுகள் இருக்கிறது. அங்கு பாரம்பரியமான கட்டிடங்களும் இருப்பதால் சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. எனவே, வருடந்தோறும் அங்கு சுற்றுலா பயணிகள் லட்ச கணக்கில் வருகை தருகிறார்கள்.

இந்நிலையில் சமீப வருடங்களாக வெனிஸ் நகருக்கு மிகவும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தருவது ஆபத்தாக மாறிவிட்டது. எனவே, சுற்றுலா பயணிகளை சமாளிப்பதற்காக அடுத்த வருடத்திலிருந்து வெனிஸ் நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் உண்டு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நுழைவு கட்டணம், இந்திய ரூபாய்க்கு 240-லிருந்து 820 வரை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. கட்டணம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில், உடல்நல குறைபாடு காரணங்களுக்காக அல்லது தங்கள் உறவினர்களை காண்பதற்காக இந்நகரத்திற்கு வருகை தருபவர்கள், மாற்றுத்திறனாளிகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்க வருபவர்கள், ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போன்றோருக்கு கட்டணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!