இலங்கையின் பொருளாதாரத்தை அழிப்பது பற்றி இரண்டை ஆண்டுகளில் நிறைவேற்றிய கோட்டாபய
Kanimoli
2 years ago

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாததை இரண்டே ஆண்டுகளில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செய்து முடித்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பொருளாதாரத்தை தாக்கி அழிப்பது பிரபாகரனின் இலக்காக இருந்தது.அதற்காக அவர் தென்பகுதியில் பல தாக்குதல்களை நடத்தினார்.
அத்தகைய தாக்குதல்களை அவர் 30 வருடங்களாக நடத்தியும் அவரால் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முடியவில்லை.
ஆனால் பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாத அந்த வேலையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இரண்டை ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.



