தங்க நகைகளை விற்க குவியும் மக்கள்
Prabha Praneetha
2 years ago

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்பனை செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக தங்க விற்பனையில் கடும் சரிவனை எதிர்நோக்கியுள்ளதாகவும், கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தங்க நகை கொள்வனவில் மக்கள் ஈடுபடுவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



