மின்சாரம் மற்றும் எரிபொருள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் !

Mayoorikka
2 years ago
மின்சாரம் மற்றும் எரிபொருள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் !

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை நிலையங்களும் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!