தற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லை
Mayoorikka
2 years ago

தற்போதைய அரசாங்கம் மீது வெளிநாடுகளுக்கு நம்பிக்கை இல்லையென முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
தற்போது நாட்டில் எரிபொருள் இல்லை. மக்கள் பல கிலோமீற்றர் அளவில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர். எனவே இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் இந்த வேளையில், எம்மால் அதற்கு தீர்வு காணாமல் நேரத்தை வீணடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



