இலங்கை ஜனாதிபதி தலைமறைவு ? எம்.பி வெளியிட்ட பரபரப்பு தகவல் !
Nila
2 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தலைமறைவான ஜனாதிபதியாகி உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று ஆளும் கட்சி உறுப்பினருக்கே ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு கொண்டு செல்வதற்கு ஒரே வழி ஊடகங்களே ஆகும். ஆனால் இன்று ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்காமல் பறிப்பதன் மூலம் அந்த வாய்ப்பையும் இல்லாமல் செய்வதாக சந்திம வீரகொடி குற்றம் சுமத்தியுள்ளார்.



