திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
Prabha Praneetha
2 years ago

திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக திருமண பதிவு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சுசந்தா ஹேமசிறி ரணசிங்க தெரிவித்தார்.



