2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை தாமதமாகலாம் - கல்வி அமைச்சர்
Nila
2 years ago

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை ஒரு மாதம் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், உயர்தரப் பரீட்சையும் தாமதமாகும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை ஒக்டோபர் அல்லது நவம்பரில் நடத்துவதற்கும் , டிசம்பரில் இடம்பெற வேண்டிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளை 2023 பெப்ரவரியில் நடத்துவதற்கும் முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



