இலங்கையில் கொவிட் தொற்று முற்றாக நீங்கவில்லை
#SriLanka
#Covid 19
#Covid Variant
Mugunthan Mugunthan
2 years ago

நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
573 கொவிட் தொற்று உறுதியான 573 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆறு நாட்களில் 71 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மீண்டும் கொவிட் தொற்று சமூகத்தில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது. இதுவரையில் கொவிட் நான்காம் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் அதனை ஏற்றிக் கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
இதுவரையில் நாட்டில் மொத்தமாக சுமார் 64 லட்சம் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



