ஜூன்9 இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் – கஞ்சன விஜேசேகர

Mayoorikka
2 years ago
ஜூன்9 இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் – கஞ்சன விஜேசேகர

ஜூன் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் தமக்கு இன்று கிடைத்ததாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதம் 9 ஆம் திகதி மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், அன்றைய தினம் மின்வெட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் அன்றைய தினம் 320 மில்லியன் ரூபாவுக்கு எரிபொருளுக்கு செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் நிர்வாகத்திடம் ஜூன் 10 ஆம் திகதி அறிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் விசாரணைகளுக்கு உதவுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டவர்களை தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!