பணத்தை கொள்ளையிட்டு கட்டிய வீடுகளுக்கு தீவைத்தது நியாயமானது - சமிந்த விஜேசிறி
Kanimoli
2 years ago

பணத்தை கொள்ளையிட்டு கட்டிய வீடுகளுக்கு தீவைத்தது நியாயமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இன்னும் கொள்ளையடிப்புகள் நிறுத்தப்படவில்லை. கொள்ளையிட்டவர்களை பாதுகாப்பதன் காரணமாகவே 225 பேர் மீது திருடர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. கொள்ளையிட்டிருந்ததால் எனது வீட்டை தீயிட்டாலும் பரவாயில்லை", எனக் குறிப்பிட்டார்.
"கொள்ளையிட்டவர்களின் வீடுகளை தீயிட்டது நியாயமானது என கூறுவார்கள் என்றால், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் எவருக்கும் இருக்க வாய்ப்பு கிடைக்காது, அவர்களிடம் இருப்பது மத்திய வங்கியில் கொள்ளையிட்ட பணம்" எனக் குறிப்பிட்டார்.



