ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை
Prabha Praneetha
2 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற பணிகள் ஆரம்பமானது.
இந்த நிலையில், முன்னறிவிப்பு இல்லாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானித்து வருகின்றார்.
இதேவேளை, நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியை கண்ணுக்குத் தெரிவதில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



