ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.
#SriLanka
#rice
#prices
Mugunthan Mugunthan
2 years ago

ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் உரிய முறையில் தலையிட்டால் ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



