ரணில் வழமையாக கூறும் கருத்துக்களையே இன்றும் கூறியுள்ளார் - சஜித் பிரேமதாச

Kanimoli
2 years ago
 ரணில் வழமையாக கூறும் கருத்துக்களையே இன்றும் கூறியுள்ளார் - சஜித் பிரேமதாச

நாடாளுமன்றம் கூடி தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்கவில்லை என்று வீதிகளில் போராட்டம் நடத்தி வரும் மக்கள், குரல் கொடுத்து வரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழமையாக கூறும் கருத்துக்களையே இன்றும் கூறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர், பிரதமரின் விசேட அறிக்கைக்கு இடமளித்தபோதும், எதிர்கட்சி தலைவரான தமக்கு இடமளிக்கவில்லை என்று சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே, சஜித் பிரேமதாச தமது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் தாம் பயிற்சியை அளித்தபோதும் எதிர்கட்சியினால் இதனை மேற்கொள்ளமுடியவில்லை என்று ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கிய சஜித் பிரேமதாச, தமக்கு பயிற்சி வழங்குவதாக கூறும் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வரும் அளவுக்கு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் 27-2 நிலையியற் கட்டளையின்படி, எதிர்கட்சி தலைவருக்கு தமது கருத்துகளை தெரிவிக்க தாம் மூன்று முறை வாய்ப்பு வழங்கியபோதும், சஜித் பிரேமதாச அதனை நழுவவிட்டதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத சஜித் பிரேமதாச, தமக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு சபாநாயகர், அனுமதியளிக்காத நிலையில், தொடர்ந்தும் எதிர்கட்சியினர் கோசங்களை எழுப்பியதாக தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!