எல்லை தாண்டி இலங்கைக்குள் நுழைந்த இந்தியர்கள் குழுவொன்று கைது...
#SriLanka
#Tamil Nadu
#Fisherman
Mugunthan Mugunthan
2 years ago

யாழ்ப்பாணம், பெதுருதுடுவைக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் இந்திய இழுவை படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பெதுருதுடுவ கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
இந்திய மீனவர்களை அவர்கள் பிடித்த மீன்களுடன் மீன்பிடிக் கப்பலுடன் அழைத்துச் சென்று தற்போதுள்ள சுகாதார நடவடிக்கைகளின்படி அவர்களைக் கரைக்குக் கொண்டுவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



