பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது – ஹர்ஷ டி சில்வா
பிரதமர் உறுதியளித்த போதிலும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் கடன்களை மறுசீரமைக்க முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையை மேற்கோள்காட்டி கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆறு மாத காலத்திற்குள் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்ய அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட திட்டம் நடைமுறைக்கு மாறானது என பிரதமர் கூறினார்.
அவ்வாறு என்றால் பிரதமரால் முன்வைக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டால் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கக்கூடிய ஒன்று என ஹர்ஷ டி சில்வா சாடினார்.
ஓகஸ்ட் மாதத்திற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன நிலையில் இந்த கடனை மூன்று வாரங்களில் மறுசீரமைக்க முடியும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.