கந்தகாடு முகாமில் இருந்து தப்பியோடியவர்களில் 44 பேரை இன்னும் காணவில்லை

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 44 கைதிகள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் வெலிகந்தை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு அறிவிக்குமாறு வெலிகந்த பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கடந்த (29ஆம் திகதி) 700க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அதில் 679 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மேலும் 272 கைதிகள் புனர்வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன 44 பேர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் வெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் 071-8591235 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வெலிகந்தை பொலிஸாரின் 027 2253143 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் மேலும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காணாமல் போன கைதிகளை கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், காணாமல் போனவர்கள் தமது வீடுகளிலோ அல்லது உறவினர்களிலோ பதுங்கியிருக்கலாம் எனவும் தெரிவித்த வெலிகந்த பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி,அவ்வாறு தங்கியிருந்தால் .உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளார்.



