புதிதாய் பிறந்த ஒரு குழந்தையுடன் தாய் பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Kanimoli
2 years ago
 புதிதாய் பிறந்த ஒரு குழந்தையுடன் தாய்  பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

  நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் புதிதாய் பிறந்த ஒரு குழந்தையுடன் தாய் குருநாகல் பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு கையாலாகாத ராஜபக்ச குடும் ஆட்சியே காரணம். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எரிபொருள் முதல் உணவுப்பண்டம் வரை விண்ணைமுட்டும் அளவுக்கு விலைவாசி எகிறியுள்ளது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டது நடுததர மக்களும் வறுமைகோட்டிற்கு உள்லே வாழும் மக்களுமே.

எ ரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போக்குவரத்துக்கள் முடங்கியுள்ளதால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு கூட கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

முச்சக்கரவண்டிகளின் கட்டணமும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதால் மக்கள் பயணங்களை மேற்கொள்ள பேருந்துகளையே நம்பியிருக்கின்றனர். இந்நிலையில் எரிபொருள் நெருக்கடியால் சேவையில் ஈடுபடும் பேருந்துக்களில் பெரும்பாலானவை தமது சேவையை நிறுத்தியுள்ளன.

இதன் காரணமாக புதிதாய் பிறந்த ஒரு பிஞ்சுக் குழந்தையுடன் தாய் குருநாகல் பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!