கல்வியை தொடர விசா தர வேண்டும்-இந்தியாவிடம் தலீபான்கள் கோரிக்கை
#Taliban
#India
Prasu
2 years ago

தலீபான்கள், தங்கள் நாட்டு மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு இந்திய அரசு விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தளிப்பான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் தலீபான்கள் அரசாங்கம், இந்திய அரசிடம் தங்கள் நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர விசா அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது.
அதாவது கொரோனா பாதிப்பிற்கு முன் சுமார் 13,000 மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்று வந்ததாக தலிபான்கள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களின் விசா குறித்து தலைநகர் காபூலில் இருக்கும் இந்திய தூதரகத்திடம் கொண்டு செல்லப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.




