320 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய இரண்டு பொறியாளர்கள் கட்டாய விடுப்பில்

Prathees
2 years ago
320 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய இரண்டு பொறியாளர்கள் கட்டாய விடுப்பில்

கடந்த ஜூன் மாதம் 09 ஆம் திகதி மின் பொறியாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போது நீர் மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்திற்கு பதிலாக இரண்டு தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்து சபைக்கு 320 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு காரணமான பொறியியலாளர்கள் இருவரை கட்டாய விடுமுறை அனுப்புவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பணிப்புரையின் பேரில் கட்டாய விடுப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டுப்பாட்டுப் பிரிவு துணைப் பொது மேலாளர் ஏ. அலஹகோன் மற்றும் பிரதம பொறியியலாளர் எரங்க குடஹேவா ஆகிய இருவரையும்  இவ்வாறு கட்டாய விடுமுறையில்  அனுப்ப  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில், தலைவரினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், உரிய அறிக்கைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு தினத்தன்று, கனியன், பழைய லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, மேல் கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே, உக்குவெல மற்றும் போவத்தன்ன ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் விவசாய நிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது.

சோஜிட்ஸ் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் ஆகிய இரண்டு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தேவையான மின்சாரம் வாங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.

இதன்படி, சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 128.4 மில்லியன் ரூபாவும், வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்திலிருந்து 191.6 மில்லியன் ரூபா பெறுமதியான மின்சாரமும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!