இலங்கைக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானியா மக்களுக்கு எச்சரிக்கை!
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராக பிரித்தானியா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராக பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை (டீசல் மற்றும் பெட்ரோல்) போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதித்துள்ளது. தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால் போராட்டங்கள் மற்றும் வன்முறை கலவரம் ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் மற்றும் வன்முறை அமைதியின்மை குறுகிய அறிவிப்பில் ஏற்படலாம்.
ஆகையினால் இலங்கைக்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.