நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் பரபரப்பாக இயங்கும் கட்டுநாயக்க விமான நிலையம்
Kanimoli
2 years ago

இலங்கையை விட்டு நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இளைஞர்கள், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பணிக்காக ஒரு சிலர் மாத்திரமே சென்று வந்த நிலையில் தற்போது தினசரி நூற்றுக்கணக்கானேர் வெளியேறுவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது பரபரப்பான இயங்கும் ஒரு இடமாக கட்டுநாயக்க விமான நிலையம் மாறியுள்ளது. நிலைமையை வெளிப்படுத்தும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



