நெருக்கடிகளை கருத்திற்கொண்டு 16 மேற்பார்வை குழுக்களை அமைக்க தீர்மானம் – பிரதமர்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை கருத்திற்கொண்டு, 16 மேற்பார்வை குழுக்களை அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இந்த மேற்பார்வைக் குழுக்களில் அரசியலில் நேரடியாக ஈடுபடாத இளைஞர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
இவற்றின் மூலம், பொதுமக்களுக்கான நிவாரணம், பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தமுடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல, இந்த மேற்பார்வைக் குழுக்கள், 19வது அரசியல் அமைப்பு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அமைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இல்லையேல், 20ஆம் திருத்தத்தின்கீழ் அதிக அதிகாரங்களை கொண்டுள்ள ஜனாதிபதி, இந்த மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாட்டுக்கு இடையூறை மேற்கொள்ளமுடியும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.