அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால தற்காலிகமாக விலகியுள்ளார்
#SriLanka
Mugunthan Mugunthan
2 years ago

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
விமான போக்குவரத்து அமைச்சு தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகள் முடியும் வரை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து திரு.நிமல் சிறிபால டி சில்வா தற்காலிகமாக விலகுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.



