ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி கோட்டாபய!
Mayoorikka
2 years ago

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையில் தற்போது எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் எரிபொருள் வழங்கி உதவுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் இலங்கை முகங்கொடுத்த சவால்களில் இருந்து மீண்டு வருவதற்காக ரஷ்யா வழங்கிய உதவிக்கும் இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் சார்ந்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



