இலங்கையில் கடவுச்சீட்டை ஒன்றை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

Kanimoli
2 years ago
இலங்கையில் கடவுச்சீட்டை ஒன்றை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இலங்கையில் கடவுச்சீட்டை ஒன்றை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்.

புதிய பாஸ்போர்ட் Passport apply /புதுப்பித்தல் Renew செய்ய என்ன வேண்டும்?

1. தேசிய அடையாள அட்டை (NIC ) மற்றும் அதனது Photo Copy (தெளிவாக விளங்க கூடியதாக இருக்க வேண்டும்)

2. பழைய பாஸ்போர்ட் இருப்பின் original and copy. 2. பிறப்பு சான்றிதழ் ஒரிஜினல் மற்றும் Photo Copy (6 மாத காலத்திற்குள் Ccertify செய்யப்பட்டது உங்கள் பிரதேச செயலகத்தில் பெறலாம்)

3. Photo Studio Acknowledgment Recipet ( அங்கீகரிக்கப்பட்ட Photo Studio ஒன்றில் சொன்னால் அவர்கள் போட்டோ எடுத்து அவர்களே passport office க்கு computer system வழியே அனுப்புவார்கள். உங்களுக்கு பிரிண்ட் ரிசீட் ஒன்றை தருவார்கள்)

4.பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்கான திகதிக்காக Online வழியே எடுத்த புக்கிங் கட்டாயம் ஒன்லைன் புக்கிங் அவசியம்

5.பாஸ்போர்ட் பெறும் விண்ணப்பம் K35 ஒன்லைனில் பெறலாம்.

கட்டணம் எவ்வளவு?

ஒரு நாள் சேவை One day service -15000/-

சாதாரண சேவை Normal service - 3500/- (கார்ட் மூலம் கட்டணம் செலுத்த முடியாது பணமாக எடுத்து செல்லவும்)

*ஒரு நாள் சேவை கொழும்பில் பத்ரமுல்லையில் மாத்திரம் கிடைக்கும் சாதாரண சேவை பத்ரமுல்ல,கண்டி,குருநாகல்,வவுனியா வில் கிடைக்கும்.
*புக்கிங் செய்யாமல் நேரில் சென்றால் ஒரே நாளில் வேலை நடக்காது. லைனில் நின்று appointment எடுக்க முடியும் முதல் 400 பேருக்கு மாத்திரம் அதுவும் 2 வாரத்திற்கு பின்னர் வருகிற ஒரு தேதியாய் பார்த்து தருவார்கள்.
*போலியானவர்கள் Agent என கூறி உங்களிடம் இருந்து பணம் கறக்க வருவார்கள் அவதானம்!!
*தண்ணீர், உணவு,குடை, கூலிங் கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு உடன் ஒருவர் இருப்பது நலம்
*One day passport இரவில் 11 மணி தாண்டியும் கொடுக்கப்படும் என எடுத்தவர்கள் சொன்னார்கள்.
*சாதாரண சேவை Normal service மூலம் passport வர ஒருமாதம் வரை ஆகலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!