பனடோலை கூட வழங்கமுடியாத அரசாங்கம் எதற்கு? சுகாதார அமைச்சர் எதற்கு? நாடாளுமன்றத்தில் கேள்வி
Mayoorikka
2 years ago

அரசாங்கம் விவசாயத்துக்காக உரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், சிறுபோகக் காலம் முடிவடைந்து விட்டது.
எனவே இந்த உரத்தை அரசாங்கம் தந்தாலும், அது பெரும்போக காலத்திலேயே வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்று வரிசையில் இருந்து பொதுமக்கள் இறப்பது, இயற்கையானது அல்ல. கொலையாகும் என்றும் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பனடொல் மருந்துக் கூட இல்லையென்றால், அரசாங்கம் ஒன்று எதற்காக நாட்டில் இருக்கவேண்டும்? சுகாதார அமைச்சர் எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.



