90 சதவீதத்திற்கும் அதிகமான விலங்கு பண்ணைகள் மூடல்
Mayoorikka
2 years ago

எரிபொருள் பிரச்சினை உட்பட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர விலங்கு பண்ணைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்து பிரச்சினை விலங்கு உணவுகளின் விலை அதிகரிப்பு என்பன விலங்கு பண்ணைகளை மூடுவதற்கு காரணமாய் அமைந்துள்ளன.
கடந்த காலத்தில் 3,200 ரூபாவாக காணப்பட்ட கோழி தீவனம் பொதி ஒன்றின் விலை 13,000 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



