எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்
Prathees
2 years ago

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலும் அரசாங்கத்தில் உள்ள சிலர் தனிப்பட்ட இலாபங்களுக்காக செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி கூட்டமைப்பினர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான எரிபொருள், எரிவாயு, உரம், நிலக்கரி போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக தமது குழு பல அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



