இலங்கையில் மீண்டும் பரவும் நோய் பெண்ணொருவர் மரணம்
Kanimoli
2 years ago

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் காணப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (05-07-2022) கொரோனா தொற்றால் மேலும் ஒரு மரணமடைந்த சம்பவம் மக்களிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று குறைவடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



