வங்காளதேசத்தில் கனமழை வெள்ளத்தால் சூழ்ந்த குடியிருப்புக்கள்

Prasu
2 years ago
வங்காளதேசத்தில் கனமழை வெள்ளத்தால் சூழ்ந்த குடியிருப்புக்கள்

வங்காளதேசத்தில் உள்ள  வடகிழக்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பருவமழையின்போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம் போல் இருந்தாலும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பேய் மழை பெய்து வருகிறது. 

இதனால் இந்த நாடு கடந்த 122 ஆண்டுகளில் கண்டிடாத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

மேலும் இந்த மழை வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் கனமழை தொடர்பான சேதங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கனமழையால் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!