அமெரிக்க பயனர்களின் தரவுகள் டிக் டாக் மூலம் வெளியாகிறது- மறுக்கும் நிறுவனம்

அமெரிக்க மக்களின் தரவுகளை வெளியிடுவதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டப்பட்டதை டிக் டாக் நிறுவனம் மறுத்திருக்கிறது.
சீன நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடையே டிக் டாக் செயலி அதிக பிரபலமடைந்திருக்கிறது. எனினும் பயனர்களின் தரவுகள் வெளியிடப்படுவதாக அந்த செயலி மீது குற்றச்சாட்டு இருந்தது. எனவே, இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் டிக் டாக் செயலி சில கட்டுப்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் டிக் டாக் செயலி மீது ஒரு புகார் கூறியிருக்கிறது. அதாவது, டிக் டாக் பயன்படுத்தும் அமெரிக்க மக்களின் தரவுகளை அந்த செயலி வெளியிடுவதாகவும், சீன நாட்டின் டிக்டாக் பொறியாளர்களோடு அமெரிக்காவில் இயங்கும் டிக் டாக் நிறுவனம் தொடர்பு வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிக் டாக் நிறுவனம் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க மக்களின் தரவுகளை எவருக்கும் நாங்கள் அளிக்கவில்லை. சீன நாட்டில் இருக்கும் பொறியாளர்களே தரவுகளை கேட்டாலும், நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று விளக்கம் கூறியிருக்கிறது.



