3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயார்
Kanimoli
2 years ago

3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜப்பானியத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு தேவையான மருந்துகள் குறித்து தாம் முன்னதாக ஜப்பானிய தூதரகத்திற்கு அறிவித்த நிலையில் குறித்த மருந்து பொருட்களை இலங்கைக்கு வழக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



