உக்ரைன் போரை விட சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கையின் நெருக்கடி நிலை !

Nila
2 years ago
உக்ரைன் போரை விட சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தும் இலங்கையின் நெருக்கடி நிலை !

உக்ரைன் போர் இன்னும் சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தலாம். எனினும் போர்க்களத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடான இலங்கையின் நெருக்கடி நிலை இன்று முக்கிய செய்தியாக மாறியுள்ளதாக தெ வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பல மாதங்களாக, இலங்கை பொருளாதார மரணச் சுழலில் உள்ளது. கடன் நெருக்கடி, முதலில் தொற்றுநோய்களின் அதிகரிப்பு மற்றும் உக்ரைன் மீதான ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இலங்கையின் நிலை தீவிரமடைந்துள்ளது.

உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பில், இலங்கையில் 70 சதவீத குடும்பங்கள் உணவு நுகர்வை குறைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உணவு விலை பணவீக்கம் சுமார் 57 சதவீதமாக உள்ளது. பெருகிவரும் பொதுமக்களின் கோபம் மற்றும் எதிர்ப்புக்கள் மே மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை வீழ்த்தியது,

எனினும் நெருக்கடி நிலைமைகள் நீடித்தன. அத்துடன் பாதுகாப்புப் படையினருக்கும் சாதாரண, கோபமடைந்த பொதுமக்களுக்கும் இடையில் புதிய மோதல்களின் சாத்தியக்கூறுகள் பற்றிய அச்சங்கள் அதிகரித்து வருகின்றன.

இலங்கையில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தது வாரம் முழுவதும் மூடப்பட்டுள்ளன.

கடந்த வாரம், தலைநகர் கொழும்பில் வைத்தியர்கள், வைத்திய ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வங்கியாளர்கள் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான பெற்றோல் அல்லது டீசலைப் பெற்றுக் கொள்ள இயலாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர நாடான பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மே மாதம் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

புத்திசாலித்தனமான மூத்த அரசியல்வாதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஒரு இடைக்கால அரசாங்கம், பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து உதவி கோருவது உட்பட நாட்டை பிரச்சனைகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறது.

எனினும் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாத பாதை இருண்டதாகவே உள்ளது என்று வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

கடவுச்சீட்டு அலுவலகங்களில் வரிசைகள் இப்போது நீளமாக உள்ளன.

மிகவும் அவநம்பிக்கையானவர்கள் இந்தியா போன்ற அருகிலுள்ள நாடுகளுக்கு படகு வழியாக தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர்.

இலங்கைப் பொருளாதாரத்தின் அழிவை ஆய்வாளர்கள், 1990களின் பிற்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியப் பொருளாதாரங்களில் ஏற்பட்ட நிதிக் குழப்பத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

‘தெற்காசியாவின் லெபனானாக’, கடனில் சிக்கி, செயலிழந்த நாடாக, இலங்கை மாறும் என்றும் ஏனையவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாட்டின் இடைக்கால அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு சாத்தியமான நிதியளிப்பு தொடர்பாக கடந்த ஜூன் 20 அன்று ஆரம்பித்த பத்து நாள் பேச்சுவார்த்தைகள் எந்தத் தீர்மானமும் இல்லாமல் கடந்த வாரம் முடிவடைந்தன என்றும் வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!