உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Kanimoli
2 years ago
உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை தலைவிரித்தாடுகின்றது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கும், உணவுக்காகவும், எரிபொருள், எரிவாயு போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளவும் வரிசைகளில் காத்திருக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாகச் சொல்லப் போனால் நாளுக்கு நாள் வரிசைகள் மாத்திரமே அதிகரிக்கின்றன, ஆனால் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

அரச, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களும், போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பவர்களும், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், பலர் தொழிற்துறையை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொது போக்குவரத்துச் சேவை முற்றிலும் ஸ்தம்பித நிலைக்குச் சென்றுள்ளது.

எனவே இவ்வாறான ஆபத்தான பயணங்களை தவிர்ப்பதோடு, அவசர அவசிய காரணங்கள் இன்றி தலைநகர் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் செல்வதை தவிருங்கள்.

முடிந்தவரையில், அவசிய பயணங்களை மாத்திரமே மேற்கொள்ளவும், உள்ளூரிலும் கூட தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

அதேசமயம், தற்போதைய நிலையில் பொதுபோக்குவரத்து பயன்பாட்டின் போது அநேகர் தொடருந்து சேவையை தேர்ந்தெடுக்கின்றனர். 

கட்டணம் குறைவு, எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக  பேருந்துகள் பல சேவையில் ஈடுபடாமை போன்ற பல காரணங்களால் தொடருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது. தொடருந்தில் தொங்கிக் கொண்டுச் செல்லும் மிக ஆபத்தான பயணமாக அது உருவெடுத்துள்ளது.  

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளி மாகாணங்களில் இருந்து தலைநகரை நோக்கிச் செல்வோர் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

அத்துடன் மொழி தெரியாத சிக்கல் நிலையையும் எதிர்கொண்டுள்ளனர்.  தொடருந்து நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டி எடுத்து வேறு இடங்களுக்கு செல்வதென்றாலும் இவ்வாறான மொழி பிரச்சினை, கட்டண பிரச்சினை போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  

தொடருந்து  பயணச்சீட்டினைப் பெற்றுக் கொள்ளக் கூட இக்கட்டான நிலையே தற்போது காணப்படுகின்றது. 

எனவே வெளிமாகாணங்களில் உள்ளவர்கள் அவசிய, அவசர காரணங்கள் இன்றி தலைநகரை நோக்கி வருவதைத் தவிர்க்கவும்.   உங்களது நேரம், உயிர், பாதுகாப்பு, பணம் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!