இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகிய எலான் மஸ்க் (Elon Musk)

Kanimoli
2 years ago
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகிய  எலான் மஸ்க் (Elon Musk)

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் வைக்கும் போது தான் அதன் ஆவணங்கள் மூலம் இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

அவருடைய முதல் மனைவியான கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன், எலாஸ் மஸ்க்கின் மூலம் ஐந்து குழந்தைகளை பெற்றுள்ளார். பின்னர் கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ், அவர் மூலம் இரு குழந்தைகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த இரட்டையர்களையும் சேர்த்து எலான் மஸ்க்கிற்கு மொத்தம் 9 குழந்தைகள் உள்ளன.

கனடாவின் ஒன்றாரியோவில் பிறந்த 36 வயதான ஜிலிஸ், எலான் மஸ்க்கை முதன்முதலில் 2015இல் சந்தித்தார். எலான் மஸ்க்கின் நிறுவனத்தில் ஷிவோன் சிலிஸ் 2017ஆம் ஆண்டு மே மாதம் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!