ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகவேண்டும் - இலங்கை திருச்சபை

Reha
2 years ago
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலகவேண்டும் -  இலங்கை திருச்சபை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலகுமாறும் இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறக்கூடிய உண்மையான பிரதிநிதித்துவ இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குமாறும் இலங்கைத் திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றமைக்காக ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கைத் திருச்சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஒருவர் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்திருந்தால் மட்டுமே அவரின் பதவிக் காலம் முறையானதாக இருக்கும் என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு திருச்சபை என்ற வகையில், நமது நாட்டின் அர்த்தமுள்ள மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில், அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கைத் திருச்சபை குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!