ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென டலஸ் அழகப்பெரும உட்பட 47 எம்பிமார் தீர்மானம்

Prathees
2 years ago
ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென டலஸ் அழகப்பெரும உட்பட 47 எம்பிமார் தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உட்பட 47 பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு ஜனாதிபதி கௌரவமான முறையில் பதவி விலகி புதிய ஜனாதிபதியை நியமிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டத்தில் இக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

ஏனெனில் அவர்கள் எவ்வளவோ காத்திருந்தும் ஜனாதிபதியின் தலைமையில் நாடு மீளும்  நிலை காணப்படவில்லை. நாடு இரத்த ஆறு ஆகிவிடும், சொத்துக்கள் சேதமடையும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவியில் நீடிக்குமானால் இறுதியில் பிரிவினைவாத சக்திகள் வலுவடைந்து நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதியின் இராஜினாமாவின் பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரது இணக்கப்பாட்டுடன் சிரேஷ்ட அரசியல் தலைவர் ஒருவரை ஜனாதிபதி அலுவலகத்திற்கு நியமிக்க வேண்டும் எனவும் கலந்துரையாடியுள்ளனர்.

இக்கலந்துரையாடலுக்கு, தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சரித ஹேரத், நாலக கொடஹேவா, சன்ன ஜயசுமன, உபுல் கலப்பட்டி, உதேன கிரிடிகொட, அகில எல்லாவல மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!