இலங்கை முழுவதும் உள்ள அனைத்து ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களையும் மூட தீர்மானம்

Nila
2 years ago
இலங்கை முழுவதும் உள்ள அனைத்து ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களையும் மூட தீர்மானம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (.ஐ.ஓ.சி) நாளை (9) மூட வாய்ப்புள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் (எம்டி) மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில் கொண்டு தமது முனைய எரிபொருள் நிலையங்களை மூடுவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.
 
நேற்றிரவு காலியில் எரிபொருள் வரிசையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்தையடுத்து எரிபொருள் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்கும் அதே வேளையில் IOC மட்டுமே தற்போது தனியார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!