எரிபொருள், எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக.... கரி, உற்பத்தி முன்னெடுப்பு!
#SriLanka
#Fuel
#Laugfs gas
Mugunthan Mugunthan
2 years ago
எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனம் கரி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.
அப்புறப்படுத்தப்பட்ட மரத்துண்டுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்யுமாறு இதற்கு முன்னர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அரச மரக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
ஒரு கிலோ 130 ரூபாய் என்ற விலையில் கரியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.