அரச உத்தியோகத்தர்களை அருகாமையில் உள்ள சேவை நிலையத்திற்கு நியமிக்குமாறு கோரிக்கை!

Prabha Praneetha
2 years ago
அரச உத்தியோகத்தர்களை அருகாமையில் உள்ள சேவை நிலையத்திற்கு நியமிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவை நிலையத்தில் நியமிக்கும் முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, அரச நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பணியமர்த்தப்படுவதில் சிரமம் உள்ள கர்ப்பிணி அலுவலர்கள், பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் வீட்டிலிருந்தபடியே இணையத்தில் பணிபுரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அரச அலுவலகங்களுக்கு அதிகாரிகளை வரவழைப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ளது.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பீட்டின்படி, 02ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வேறு சேவை நிலையத்திற்கு நியமிக்கும் விடயம் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களுக்கு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இதனை தனியார் துறைக்கு பிரயோகிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!