மகாசங்கத்தினர் கோட்டாபயவிற்கு எச்சரிக்கை
Kanimoli
2 years ago

சர்வக்கட்சி அரசை ஸ்தாபிப்பதற்கு வழிவிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் கண்டியில் ( வீர கெப்பட்டிபொல சிலைக்கு முன்பாக) குறித்த பிரகடனம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சிகளிடமும் அந்த பிரகடனம் ஊடாக கோரிக்கை விடுக்கப்படும் எனவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.



