ரயில் இல்லாமையால் நிலைய அதிபர் அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல்
Kanimoli
2 years ago
தாம் வீடுகளுக்கு செல்ல ரயில் இல்லாமையால் ஆத்திரமடைந்த பணிகள், பாணந்துறை நிலைய அதிபர் அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் தாக்குதலில் ரயில் நிலைய அதிபரின் அலுவலகம் பலத்த சேதமடைந்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு விரைவு ரயில்கள் மாத்தறை மற்றும் காலி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதும், அவைகள் பாணந்துறை ரயில் நிலையத்தில் நிறுதத்ப்படவில்லை.
இது தொடர்பில் ரயில் நிலைய அதிபரிடம் அங்கிருந்த பயணிகள் கேள்வியெழுப்பி இருந்தனர். இதன்போது ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து பயணிகள் திடீரென ரணில் நிலைய அதிபரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்ததுடன் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.