நாளை இரவு இலங்கை தீவுக்கு ஒரு உரக் கப்பல் வருகிறது.
40,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாளை இரவு இலங்கையை வந்தடைய உள்ளது.
இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் பொஹராவை அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி உரக்கப்பல்கள் வருகையின் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விளைநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதான பருவத்திற்கு தேவையான பொஹரா வழங்கும் வேலைத்திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.